Monday , September 28 2020
Breaking News

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் எட்டுப் பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் எட்டுப் பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

நேற்றிரவு சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவல்களின்படி, புதிதாக 8 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்களில் ஐந்து பேர், கட்டாரில் இருந்தும், இரண்டு பேர் ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்தும் நாடு திரும்பியவர்கள் என்று செய்திகள் கூறுகின்றன.

மேலும் ஒருவர் கந்தகாடு புனர்வாழ்வு முகாம் தொற்றுடன் தொடர்புடையவர் என்றும் கூறப்படுகிறது.

இதையடுத்து, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை, 2671 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 2001 பேர் குணமடைந்து விட்ட நிலையில், தற்போது, 659 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *