Saturday , September 26 2020
Breaking News

இந்து கடவுள்களை இழிவுபடுத்தி, யு டியூப் சேனலில் வீடியோ வெளியிட்டவர்கள் கைது.

இந்து கடவுள்களை இழிவுபடுத்தி, யு டியூப் சேனலில் வீடியோ வெளியிட்டவர்கள் மீது, மதக்கலவரத்தை தூண்டுதல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ், தமிழகப் பொலிசார் வழக்குப் பதிவு செய்து, ஒருவரை கைது செய்துள்ளனர்.

கருப்பர் கூட்டம் யு டியூப் சனலை நடத்தி வரும், சுரேந்தர் நடராஜன் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த சனலை தடை செய்ய வேண்டும் என, சென்னை, பொலிஸ் ஆணையர் அலுவலகத்தில், பா.ஜ.க வழக்கறிஞர் அணி தலைவர், பால். கனகராஜ், முறைப்பாடு செய்தார்.

இந்த விவகாரத்தில், உரிய நடவடிக்கை கோரி, இந்து தமிழர் கட்சி நிறுவன தலைவர், ராம.ரவிகுமார் என்பவர், பொலிஸ் ஆணையர் அலுவலகத்தில், நேற்று முன்தினம் புகார் அளித்தார்.

இதுகுறித்து, சென்னை, மத்திய குற்றப்பிரிவு பொலிசார், சர்ச்சைக்குரிய, யு டியூப் சனல்கள் மற்றும் அதன் பொறுப்பாளர்கள் மீது ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சுரேந்தர் நடராஜன் மற்றும் அவரது கூட்டாளி களை, தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்தநிலையில், சனலின் நிர்வாகிகளில் ஒருவரான, வேளச்சேரியைச் சேர்ந்த, செந்தில்வாசன், என்பவரை நேற்று இரவு பொலிசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *