Monday , September 28 2020
Breaking News

சாரா புலஸ்தினி நாட்டை விட்டு தப்பிச் செல்லவில்லை – பாதுகாப்புப் படைகள் தீவிர தேடுதல்.

கடந்த ஆண்டு ஈஸ்டர் ஞாயிறன்று, கடுவாப்பிட்டிய தேவாலயத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தியஆச்சி முகமட் ஹஸ்தூனின் மனைவியான சாரா எனப்படும் புலஸ்தினி ராஜேந்திரன், இலங்கையிலேயே இருப்பதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

சாய்ந்தமருதில் கடந்த ஆண்டு ஏப்ரல் 6ஆம் திகதி நடந்த குண்டுவெடிப்பில் சாராவும் கொல்லப்பட்டு விட்டதாக முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும், அவரது பெற்றோரிடம் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளும், சாய்ந்தமருதில் கொல்லப்பட்டவர்களின் மாதிரிகளும் மரபணுச் சோதனையில் பொருந்தவில்லை என்றும், எனவு சாரா அந்த குண்டுவெடிப்பில் உயிரிழக்கவில்லை என்றும் அரசாங்க பகுப்பாய்வு திணைக்களம் தெரிவித்திருந்த்து.

இந்த நிலையிலேயே சாரா புலஸ்தினி, ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்குப் பின்னர் நாட்டை விட்டு வெளியேறியதாக எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முன்னதாக அவர், கடந்த செப்ரெம்பர் மாதம் கடல் வழியாக இந்தியாவுக்கு தப்பிச் சென்றதாக கூறப்பட்டது.
எனினும் அவர் தற்போது இலங்கையிலேயே மறைந்திருப்பதாக கருதும் பாதுகாப்புத் தரப்பினர் அவரைக் கண்டறிவதற்காக விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர் என்றும் செய்திகள் கூறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *