Saturday , September 26 2020
Breaking News

மும்பையில் அடுத்தடுத்து இடிந்து விழுந்த கட்டடங்கள் – 7 பேர் பலி, 16 பேர் படுகாயம்.

மும்பை நகரில் நேற்று இரண்டு கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்த விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் கூறுகின்றன.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், மும்பையில் உள்ள போர்ட் பகுதியில் இருந்த ஐந்துமாடி கட்டிடம் கடும் மழை காரணமாக நேற்று பிற்பகல் 4.40 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது.

இந்த கட்டிடத்தில் தங்கி இருந்த பலர் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விபத்தில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியத 23 பேரை மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனாலும், இந்த கட்டிட விபத்தில் சிக்கி இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் மேலும் சிலர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதால் அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை மும்பையில் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் மற்றொரு இரண்டுமாடிக கட்டடம் இழுந்து விழுந்ததில் 2 பேரி பலியாகியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
இந்த இரண்டு விபத்துகளிலும் 16 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர் என்று செய்திகள் கூறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *