Wednesday , September 30 2020
Breaking News

தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபிலுக்கு கொரோனா தொற்று உறுதி.

தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபிலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர், சென்னை, கிறீன்வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

முன்னதாக அமைச்சர் நிலோபர் கபிலின் மகன், மருமகனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது அவருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது.

அமைச்சர் நிலோபர் கபில் நேற்று அமைச்சரவை கூட்டத்திலும் பங்கேற்கவில்லை. ஏற்கனவே தமிழக அரசின் மூன்று அமைச்சர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில் மேலும் ஒரு அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *