Wednesday , September 30 2020
Breaking News

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து ஆய்வகங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தும் ரஷ்யா – மேற்கு நாடுகள் குற்றச்சாட்டு.

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஆய்வகங்கள் மீது சைபர் தாக்குதல்களை நடத்தி, தடுப்பு மருந்துகளை திருடும் முயற்சியில் ரஷ்ய ஹேக்கர் குழுவினர் இறங்கியுள்ளதாக இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா ஆகிய நாடுகள் கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டறிவதில் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்த நிலையில், ரஷ்யா அதன் ஹேக்கர்களை பயன்படுத்தி கொரோனா வைரஸ் மருந்து தயாரிக்கும் ஆய்வக கணினிகளை ஹேக் செய்து அறிவு திருட்டில் ஈடுபட்டு வருவதாக இங்கிலாந்தின் தேசிய சைபர் பாதுகாப்பு மையம் நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளது. “பிரபுக்கள் அல்லது வசதியான கரடி என்ற பெயரில் அழைக்கப்படும் ஏபிடி29 என்ற ரஷ்ய ஹேக்கிங் குழு இந்த வேலையில் ஈடுபட்டுள்ளது.

அரசாங்கம்,இராஜதந்திரம், அறிவு தளம், சுகாதாரம் மற்றும் எரிசக்தி ஆகியவற்றை முக்கிய இலக்காக வைத்து அறிவுசார் சொத்துக்களை இந்தக் குழு திருடுகிறது.

இதில் வசதியான கரடி எனும் ஹேக்கிங் குழு ரஷ்ய உளவுத்துறையுடன் கைக்கோர்த்துக் கொண்டு 2016 அமெரிக்க தேர்தலில் தலையிட்டதாக நம்பப்படுகிறது.
எனவே தடுப்பு மருந்து ஆராய்ச்சி நிறுவனங்களை இவை தொடர்ந்து குறி வைக்கும். இந்த அச்சுறுத்தலை தீவிரமாக எடுத்துக் கொள்ள கேட்டுக்கொள்கிறோம்.

இந்த மதிப்பாய்வை கனேடிய தகவல் தொடர்பு பாதுகாப்பு நிறுவனம், அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை, சைபர் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு பாதுகாப்பு நிறுவனம் மற்றும் தேசிய பாதுகாப்பு நிறுவனம் ஆகியோரும் ஆதரிக்கின்றனர். ” என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *