Monday , September 28 2020
Breaking News

கொரோனா தடுப்பு விதிகளை மீறிய இங்கிலாந்து அணி வீரர் ஆர்ச்சர் போட்டியில் இருந்து நீக்கம்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில், கொரோனா விதிகளை மீறியதற்காக இங்கிலாந்து வீரர் ஆர்ச்சர் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்போர்ட் மைதானத்தில் நேற்று தொடங்கியது.

இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் ஜோப்ரா ஆர்ச்சர், 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

அணியின் பாதுகாப்பு விதிகளை ஆர்ச்சர் மீறிய குற்றத்திற்காக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை சார்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இதன்படி, அவர் 5 நாட்கள் தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டும்.

அத்துடன் அவருக்கு 2 முறை கொரோனா பரிசோதனை நடத்தப்படும்.
அவரது சுய தனிமைப்படுத்துதல் காலம் முடிவடைவதற்குள், பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு எதுவும் இல்லை என்று உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *