Wednesday , September 30 2020
Breaking News

யாழ்ப்பாணம் – கொழும்புத்துறையில், வீடொன்றுக்குள் கைகுண்டுகள் மீட்பு.

யாழ்ப்பாணம் – கொழும்புத்துறையில் நேற்று வீடு ஒன்றைச் சுத்தம் செய்த போது 17 கைக்குண்டுகள் அடங்கிய இரும்புப் பெட்டி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

யாழ்ப்பாணம் – கொழும்புத்துறையில் நேற்றுக் காலை வீடொன்றை சுத்தம் செய்த போது, வீட்டு வளாகத்தில் பெட்டி ஒன்று புதைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதற்குள் வெடிபொருள்கள் இருப்பதை அவதானித்த வீட்டு உரிமையாளர், அதுகுறித்து யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பொலிஸார், விசாரணைகளை முன்னெடுத்து, வெடிபொருட்களை அகற்றுவதற்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் அனுமதியை பொலிஸார் பெற்றுக்கொண்டனர்.

இந்த நிலையில் நீதிமன்ற அனுமதியுடன் சிறப்பு அதிரடிப் படையினரின் உதவியுடன் நேற்று மாலை பெட்டியை அங்கிருந்து அகற்றிய பொலிசார், அதற்குள்ளிருந்த 17 கைக்குண்டுகளையும் செயலிழக்கச் செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *