Wednesday , September 30 2020
Breaking News

நாகாலாந்து மாநில முதலமைச்சருக்கு கொரோனா அறிகுறி.

நாகாலாந்து மாநில முதலமைச்சருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதையடுத்து அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

நாகாலாந்து மாநில முதலமைச்சர் நெய்பியு ரியோ, கடந்த வாரம் தனது அமைச்சர்கள், உயரதிகாரிகள் ஆகியோருடன் புதுடில்லி சென்று அங்கு மாநில சட்டம், ஒழுங்கு நிலவரம் குறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

புதுடில்லியிருந்து நாகாலாந்து திரும்பிய பின்னர் அவர், மாநில ஆளுநர் ஆர்.என்.ரவியையும் சந்தித்தார்.

இந்த நிலையில் முதலமைச்சர் நெய்பியு ரியோவுக்கு கொரோனா அறிகுறி இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து அவர் தனக்கு தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.
எனினும் அவருக்கு இன்னமும் தொற்று உறுதி செய்யப்படவில்லை.

இதையடுத்து அவருடன் சென்ற இரு அமைச்சர்களுக்கு கொரோனா பரிசோதனை நடந்ததாகவும், முடிவுகள் நாளை வெளியாகும் என்பதால் அவர்களும் தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்திக் கொண்டதாக நாகாலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *