Wednesday , September 30 2020
Breaking News

அரசியல் கட்சிகளின் சார்பில் பௌத்த பிக்கு வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருப்பது சட்டவிரோத செயல் – மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்

இரத்தினபுரி மாவட்டத்தில் இரண்டு அரசியல் கட்சிகளின் சார்பில் பௌத்த பிக்கு ஒருவர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருப்பது சட்டவிரோத செயல் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கொலன்னே சிறிசாந்த வஜிர தேரர் என்ற பௌத்த பிக்கு இரத்தினபுரி மாவட்டத்தில், அபே ஜனபல கட்சி சார்பிலும், ஜனசொ பெரமுன கட்சி சார்பிலும் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளார் என்று நேற்று தகவல் வெளியாகியது.

இந்த நிலையில் இதுகுறித்து தெரிவிக்கப்பட்ட முறைப்பாடுகளை அடுத்து, கருத்து வெளியிட்டுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய, இரண்டு கட்சிகளின் வேட்புமனுக்களில் ஒருவர் போட்டியிடுவது சட்டவிரோத்தானது என்று தெரிவித்தார்.

குறித்த வேட்பாளர் தெரிவு செய்யப்பட்டாலும் கூட அவரால் நாடாளுமன்ற ஆசனத்தைப் பெற முடியாது என்றும் மகிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை பொதுத் தேர்தலுக்காக வேட்புமனுக்களைத் தாக்கல் செய்த எந்த வேட்பாளரும் போட்டியில் இருந்து விலகிக் கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனவே, போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாகவும், இன்னொரு கட்சி அல்லது வேட்பாளருக்கு வாக்களிக்குமாறும் விடுக்கப்படும் கோரிக்கைகளுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என்றும் மகிந்த தேசப்பிரிய கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *