Wednesday , September 30 2020
Breaking News

யாழ்ப்பாணம் –மண்டைதீவு கடற்பகுதியில் நேற்று 111 கிலோ கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் கைது.

யாழ்ப்பாணம் –மண்டைதீவு கடற்பகுதியில் நேற்று 111 கிலோ கஞ்சா போதைப்பொருளுடன், கடற்படையினரால் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மண்டைதீவு கடற்பரப்பில் சந்தேகத்துக்குரிய படகு ஒன்றை கடற்படையினர் சோதனையிட்ட போதே, அதில் கஞ்சா மூடைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அந்தப் படகில் இருந்து இரண்டு பேரையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்டவர்கள், பாசையூர் மற்றும் நாவாந்துறை பகுதிகளை
சேர்ந்த இளைஞர்கள் என்று கூறப்படுகிறது.

இவர்களையும், கஞ்சா பொதிகளுடன் கைப்பற்றப்பட்ட படகையும் பொலிசாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *