Tuesday , September 29 2020
Breaking News

பிரேசில் ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனோராவுக்கு கொரோனா தொற்று இருப்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரேசிலில் கடந்த சில நாட்களாக தினமும் 40 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.

நேற்றும் 40 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.
பிரேசிலில் இதுவரை, சுமார் 20 இலட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 75 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.

இந்தநிலையில், கடந்த 7ம் திகதி, பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனோராவுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார்.

நான் நலமுடன் இருக்கிறேன். காய்ச்சல், மூச்சுத் திணறல் போன்ற பிரச்சினைகள் எதுவும் இல்லை.

நான் பணிக்குச் செல்ல வேண்டும். வீட்டில் தனித்திருக்க முடியவில்லை எனக்கூறிய போல்சனோரா, மீண்டும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார்.

இந்தநிலையில் மருத்துவப் பரிசோதனை முடிவில் அவருக்குக் கொரோனா தொற்று இருப்பது மீண்டும் உறுதியாகியுள்ளது. கொரோனாவைப் பற்றி மக்கள் கவலைப்படக் கூடாது. முகக் கவசம் அணியத் தேவையில்லை.

மக்கள் சுதந்திரமாக வெளியே வர வேண்டும் என, பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனோரா கூறி வந்தார்.
இதற்கு உலக சுகாதார அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்தது.

ஜெய்ர் போல்சனோராவின் அலட்சியமே பிரேசிலில் கொரோனாவால் அதிக பாதிப்பு ஏற்படக் காரணம் என, பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் அவருக்கே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *