Thursday , September 24 2020
Breaking News

கொழும்பின் சில பகுதிகளுக்கு இன்று இரவு 8 மணி முதல் 10 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு

கொழும்பின் சில பகுதிகளுக்கு இன்று இரவு 8 மணி முதல் 10 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

கொழும்பு 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் இன்று இரவு 8 மணி முதல் 10 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அத்துடன் கொழும்பு 11 மற்றும் 12 பகுதிகளில் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொலன்னாவ உள்ளிட்ட சில பகுதிகளில் இன்று பகல் 2 மணி முதல் 9 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

கொலன்னாவ நகர சபைக்குட்பட்ட பகுதி, இராஜகிரிய, மொரகஸ்முல்ல, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கப்புர, நாவல, கொஸ்வத்தை மற்றும் இராஜகிரியவிலிருந்து நாவல திறந்த பல்கலைக்கழகம் வரையான பிரதான வீதி மற்றும் அதனுடன் தொடர்புடைய குறுக்கு வீதிகளுக்குமான நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.

அத்தியாவசிய திருத்தப்பணிகளுக்கான நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *