Tuesday , September 29 2020
Breaking News

கொரோனாவுக்குப் பின்னர் இரகசியமாக நாடு திரும்பும் அகதிகள் – இரவுக் கண்காணிப்பை இரட்டிப்பாக்கியது கடற்படை.

கொரோனா தொற்றுக்குப் பின்னர் தமிழ்நாட்டில் இருந்து குறைந்தது 7 இலங்கை தமிழ் அகதிகள் இரகசியமான முறையில் நாடு திரும்பியிருப்பதாக பொலிஸ் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கொரோனா தொற்றை அடுத்து தமிழகம் முடக்கப்பட்டுள்ள நிலையில், சுகாதார, மற்றும் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து தப்பிக் கொள்வதற்காக, அங்குள்ள தமிழ் அகதிகள் இலங்கைக்கு தப்பி வரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்திய- இலங்கை சர்வதேச கடல் எல்லையில் இரவு நேரத்தில் கடற்படையின் கண்காணிப்பு இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாக, கடற்படையின் புதிய ஊடகப் பேச்சாளரான கப்டன் இந்திக டி சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும், சட்டவிரோதமாக அகதிகள் நாடு திரும்புவதை தடுப்பதற்காக, சர்வதேச கடல் எல்லையில் 24 மணி நேரமும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையே, அகதிகள் வருகையை தடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்டசெயலாளர் சிஏ.மோகன்ராஸ்தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழ் அகதிகள் நாடு திரும்புவதை தாம் எதிர்க்கவில்லை என்று கூறியு ள்ள அவர், அகதிகள் முறைப்படியான அனுமதிகளைப் பெற்று நாடு திருப்ப வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அதேவேளை, தற்போதைய நிலைமை நாடு திரும்புவதற்கு ஏற்றதல்ல என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *