Monday , September 28 2020
Breaking News

வெளிநாட்டுக்கு தாரை வார்க்கப்பட்ட தேசிய வளங்களை மீளப் பெறுவோம் – மகிந்த சூளுரை.

வெளிநாடுகளுக்கு தாரை வார்க்கப்பட்டுள்ள தேசிய வளங்களை மீட்டெடுக்கும் முயற்சியை ஒருபோதும் கைவிடமாட்டேன் என்று பிரதமர் மகிந்த ராஜபக்ச சூளுரைத்துள்ளார்.

மஹியங்கனையில் நேற்று தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
சர்வதேச நாடுகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களில் இருந்து விலகிக் கொள்வது எளிதான விடயமல்ல என்றும் பிரதமர் இந்தக் கூட்டத்தில் உரையாற்றும் போது குறிப்பிட்டார்.

எவ்வித முரண்பாடுகளும் இல்லாத வகையில், உரிய வழிமுறைகளைப் பின்பற்றி இதனைச் செய்ய வேண்டும் என்றும் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

ஒப்பந்தங்களால் தாரை வார்க்கப்பட்டுள்ள தேசிய வளங்களை மீட்டு அதனை எதிர்கால தலை முறையினருக்கு பொறுப்பாக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *