Thursday , September 24 2020
Breaking News

நல்லூர் திருவிழாவில் மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுக்கே அனுமதி – இராணுவத் தளபதி தெரிவிப்பு.

நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந் திருவிழாவுக்கு, மட்டுப்படுத்தப்பட்டளவு பக்தர்களே அனுமதிக்கப்படுவார்கள் என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா
தெரிவித்துள்ளார்.

நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந் திருவிழாவில் கூடுதல் பக்தர்களை அனுமதிக்குமாறு, பிரதமர் மகிந்த ராஜபக்ச இராணுவத் தளபதிக்கு உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

நேற்று யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த இராணுவத் தளபதியிடம், நல்லூர் திருவிழா காலத்தில் பொது மக்களை அனுமதிப்பதற்கான பொறிமுறைகள் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்துள்ள அவர், “இம்முறை கொரோனா தொற்று காரணமாக நல்லூர் கந்தன் ஆலயத்தில் பூசை வழிபாடுகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி, கோயிலுக்கு வரும் அனைவரும் கட்டாயமாக முகக் கவசம் அணிய வேண்டும்.

அனைத்து மாவட்டங்களிலும் இந்த நடைமுறை பின்பற்றப்படவுள்ளது. நல்லூர் ஆலயத்தைப் பொறுத்தவரை உலகப் பிரசித்தி பெற்ற ஒரு கோயில். எல்லா இடங்களிலிருந்தும் அடியவர்கள் கோயிலுக்கு வருவதனால் சில கட்டுப்பாடுகளை விதிப்பதற்குத் தீர்மானித்துள்ளோம்.

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி திருவிழாவை நடத்துமாறு யாழ்.மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதியிடம் கூறியுள்ளேன்” என்றும் அவர் தெரிவித்தார்.
எனினும், எந்தளவு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றோ, என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றோ அவர் எந்த தகவலையும் வெளியிடவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *