Monday , September 28 2020
Breaking News

பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் ஒருவர், பசு கோமியத்தை குடிக்குமாறு அறிவுறுத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் ஒருவர், பசு கோமியத்தை குடிக்குமாறு அறிவுறுத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகின்ற நிலையில், மனிதர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் நோய் தொற்றில் இருந்து பாதுகாக்கவும் பல்வேறு மருத்துவ முறைகள் கூறப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் மேற்கு வங்க மாநில பாரதீய ஜனதா கட்சித் தலைவர் திலீப் கோஷ் பசுவின் கோமியத்தை குடித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்குமாறு அறிவுறுத்தி உள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் துர்காபூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், “மக்கள் கொரோனா வைரசால் அவதிப்படுகிறார்கள். கழுதைக்கு பசுவின் மதிப்பு புரியாது.
இது இந்தியா, பகவான் கிருஷ்ணரின் நிலம், இங்கே மாடுகள் கடவுள், நாங்கள் வணங்குகிறோம். ஆரோக்கியமாக இருக்க எங்களுக்கு பசு சிறுநீர் இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

திலீப் கோஷ் மாடுகள் குறித்து சர்ச்சைக்குரிய அறிக்கையை வெளியிடுவது இதுவே முதல் முறை அல்ல. கடந்த 2019 நவம்பரில் இவர் பசுவின் பாலில் தங்கம் உள்ளது என கூறி இருந்தது சமூக மற்றும் அரசியல் வட்டாரங்களில் பரவலான விமர்சனங்களைத் ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *