Wednesday , September 30 2020
Breaking News

மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் மழையினால் ரத்து.

மான்செஸ்டரில் நடந்து வரும் இங்கிலாந்து – மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் மழையினால் கைவிடப்பட்டுள்ளது.

இங்கிலாந்து – மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடந்து வருகிறது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 9 விக்கெட்டுக்கு 469 ஓட்டங்கள் குவித்து ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்திருந்தது.

இங்கிலாந்து அணியின் சார்பில் ரொம் சிப்லி 120 ஓட்டங்களும், பென் ஸ்டோக்ஸ் 176 ஓட்டங்களும் பெற்றனர்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய மேற்கிந்தியத் தீவுகள்அணி 2-வது நாள் முடிவில் 14 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 32 ஓட்டங்களை எடுத்திருந்தது.

கிரேக் பிராத்வெய்ட் 6 ஓட்டங்களுடனும், அல்ஜாரி ஜோசப் 14 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்த நிலையில் 3-வது நாளான நேற்றைய ஆட்டம் மழையால் முழுமையாக பாதிக்கப்பட்டது.

தொடர்ந்து மழை பெய்ததால் ஒரு பந்து கூட வீசப்படாமல் 3-வது நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.
இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *