Monday , September 28 2020
Breaking News

ஓகஸ்ட் 10ஆம் திகதிக்குப் பின்னரே பாடசாலைகள் மீள ஆரம்பிக்க கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.

ஓகஸ்ட் 10ஆம் திகதிக்குப் பின்னரே பாடசாலைகளின் அனைத்து வகுப்புகளையும் மீள ஆரம்பிக்க கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கந்தகாடு கொரோனா தொற்று கொத்தணி அடையாளம் காணப்பட்டதை அடுத்து கடந்த திங்கட்கிழமை பாடசாலைகளை ஒருவாரம் மூடுவதற்கு அரசாங்கம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்று கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில், பாடசாலைகளை மீளத் திறப்பதை மேலும் ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதன்படி, தரம், 11 , 12, 13 மாணவர்களுக்கு மாத்திரமே, பாடசாலைகளில் எதிர்வரும் 27ஆம் திகதி வகுப்புகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

ஏனைய மாணவர்களுக்கான வகுப்புகள் எப்பேர் ஆரம்பிக்கப்படும் என்று அரசாங்கம் தகவல் வெளியிடவில்லை.

எனினும், கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள ராஜாங்கன, வெலிக்கந்த கல்வி வலயங்களில் ஓகஸ்ட் 10ஆம் திகதி வரை பாடசாலைகளை திறக்க வேண்டாம் என்று சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன், பொதுத் தேர்தல் முடிந்த பின்னர் ஓகஸ்ட் 10ஆம் திகத பாடசாலைகளை மீளத் திறக்குமாறும் கல்வி அமைச்சுக்கு சுகாதார அமைச்சினால் ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே ஓகஸ்ட் 10ஆம் திகதிக்குப் பின்னரே பாடசாலைகளைமுழு அளவில் திறப்பதற்கு கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளை, கல்விப் பொதுத் தராதரப் பத்திய உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை ஆகியன நடைபெறவுள்ள திகதிகளை கல்வி அமைச்சு நாளை வெளியிடவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *