Saturday , September 26 2020
Breaking News

திட்டக்குடி தொகுதி திமுக எம்.எல்.ஏ. கணேசனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது

தமிழகத்தில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதி திமுக எம்.எல்.ஏ. கணேசனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இதையடுத்து தமிழ்நாட்டில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏக்ளின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்று உறுதியானதையடுத்து எம்.எல்.ஏ கணேசன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட உள்ளார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்தனர்.

தற்போது தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *