Tuesday , September 29 2020
Breaking News

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, முதல்வர் அலுவலகத்துக்கு சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 24 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 1,108 ஆக உயர்ந்துள்ளது.
மொத்த பாதிப்பு 47 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

கான்பூர், ஆக்ரா, மீரட் போன்ற நகரங்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

உ.பி அரசு மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தியதாக மோடி பாராட்டி வந்த நிலையில், தற்போது கொரோனா வேகமெடுத்துள்ளதால் அதிகாரிகள் மீது முதல்வர் யோகி ஆதித்யநாத் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் லக்னோவில் உள்ள முதல்வர் அலுவலக அதிகாரிகள் சிலருக்கு நேற்று தொற்று உறுதியானது.

இதனால் அடுத்த 48 மணி நேரத்திற்கு முதல்வர் அலுவலகத்தை பூட்டி சீல் வைத்துள்ளனர்.
அதே டி.ஜி.பி அலுவலகத்திலும் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *