Wednesday , September 30 2020
Breaking News

இத்தாலியில் தலைஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை மூலம் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டுள்ளனர்.

இத்தாலியில் தலைஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை மூலம் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டுள்ளனர்.

30 பேர் கொண்ட மருத்துவர்கள் மற்றும் தாதிகள் அடங்கிய குழுவினர் இந்த வெற்றிகரமான அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர்.

இதற்காக 3டி மாதிரிகள் பயன்படுத்தப்பட்டு, ஒரு வருடத்துக்கும் மேலாக மருத்துவர்கள் திட்டமிட்டு வந்தனர்.

மண்டை ஓட்டுடன் ரத்த நாளங்களும் இந்த இரட்டைக் குழந்தைகளுக்கு ஒட்டி இருந்தது.
இரண்டுவயதுடைய இந்தக் குழந்தைகளின் தலையை பிரித்தெடுக்கும் அறுவைச் சிகிச்சை கடந்த 5ஆம் திகதி றோமில் உள்ள யேசு சிறுவர் மருத்துவமனையில் 18 மணி நேரம் இடம்பெற்றுள்ளது.

இதுவே மூன்றாவதும் இறுதியுமான அறுவைச் சிகிச்சை என்றும் இதன் மூலம், இரண்டு குழந்தைகளும் தனித்தனியாக பிரிக்கப்பட்டதாகவும், குழந்தைகள் இரண்டும் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இத்தாலியில் இவ்வாறு செய்யப்பட்ட அறுவைசிகிச்சை வெற்றி பெற்றது இதுவே முதல்முறையாகும்.

குழந்தைகளுக்கு தொற்று ஏற்படக் கூடிய ஆபத்து இருப்பதால், சில மாதங்களுக்கு தலைக்கவசம் ஒன்றை அணிந்திருக்க வேண்டும் என்றும், எனினும் குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னர் அவர்களால் இயல்பான முறையில் செயற்பட முடியும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *