Monday , September 28 2020
Breaking News

ஈரானில் 2.5 கோடி பேருக்கு கொரோனா தொற்று உறுதி – ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரவ்கானி தெரிவித்துள்ளார்

ஈரானில் 2.5 கோடி பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக, ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரவ்கானி தெரிவித்துள்ளார். மேலும் 3.5 கோடி பேருக்கு தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

அரசு தொலைக்காட்சியில் பேசிய அவர், ஈரானில் இதுவரை 2.6 லட்சம் பேர் கொரோனா சிகிச்சையில் இருந்து வருகின்றனர் என்றும், இதுவரை 14,000 பேர் கொரோனாவுக்கு பலியாகி விட்டனர் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

ஈரானில் இதுவரை 2இலட்சத்து 69 ஆயிரத்து 440 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளதாக ஈரானிய சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் ஜனாதிபதி ஹசன் ரவ்கானி அதை விட பல மடங்கான எண்ணிக்கையை அறிவித்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதேவேளை, ஈரானிய தலைநகர் தெஹ்ரானில் மத நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள், பாடசாலைகள், விடுதிகள், பொழுதுபோக்கு பூங்காக்கள், மிருகக்காட்சி சாலைகள் போன்றவற்றிற்கு ஒரு வார காலம் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

எட்டுக் கோடி சனத்தொகை கொண்ட ஈரான் மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனாவால் அதிகம் பாதிப்பை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *