Monday , September 28 2020
Breaking News

சீனாவில் கரைபுரண்டு பாயும் வெள்ளம் – நீரை வெளியேற்ற அணை குண்டு வைத்து தகர்ப்பு.

சீனாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்துக்கு 140 பேர் பலியாகி உள்ள நிலையில், மழை வெள்ளத்தை வெளியேற்றுவதற்காக அணை ஒன்றை அதிகாரிகள் வெடி வைத்து தகர்த்துள்ளனர்.

சீனாவில் கடந்த மாதத்தில் இருந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக உன்னான், குவாங்ஜி, திபெத், குய்சோவ், அன்குய், ஜிலின், லியானிங் உள்ளிட்ட பிராந்தியங்கள் இந்த மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

ஒரு மாதத்துக்கும் மேலாக விட்டு விட்டு கனமழை பெய்வதால் 400-க்கும் மேற்பட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஆசியாவிலேயே மிக நீளமான யாங்சி நதி உள்ளிட்ட பல நதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

யாங்சி நதியின் குறுக்கே கட்டப்பட்டு உள்ள மிகப்பெரிய அணையான த்ரீ கோர்ஜஸ் அணையில் வழக்கமான அளவை விட 15 மீட்டருக்கு மேல் நீர்மட்டம் அதிகரித்து ள்ளது. எனவே கடந்த வாரம் அணை திறந்து விடப்பட்டது. இதனால் யாங்சி நதியில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதைப்போல அன்குய் மாகாணத்தில் யாங்சி நதியின் கிளை நதிகளில் ஒன்றான சுகேயின் குறுக்கே கட்டப்பட்டு இருந்த பெரிய அணை ஒன்று நிரம்பி அருகில் உள்ள பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.

இதனால் நதிப்படுகையில் வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்துவதற்காக அந்த அணையை நேற்று அதிகாரிகள் வெடி வைத்து தகர்த்துள்ளனர். இதனால் அணை தண்ணீர் முழுவதும் சுகே ஆற்றில் பாய்ந்து செல்கிறது.

இந்த மழை வெள்ளத்தால் குறித்த பிரதேசங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்ந்து முடங்கி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *