Monday , September 28 2020
Breaking News

யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில், நேற்றிரவு யானை தாக்கி பெண் விரிவுரையாளர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில், நேற்றிரவு யானை தாக்கி பெண் விரிவுரையாளர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக தொழில்நுட்பப் பீடத்தின் விரிவுரையாளரான களனியை சேர்ந்த 32 வயதுடைய, காயத்திரி டில்ருக்சி என்ற விரிவுரையாளரே, காயமடைந்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

விரிவுரையாளர் விடுதியில் தங்கியிருந்த அவர் மற்றொரு பெண் விரிவுரையாளருடன், வளாகப் பகுதியில் நடமாடிய போதே யானை அவர்களைத் துரத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து இருவரும் வெவ்வேறு திசைகளில் ஓடியுள்ளனர். அப்போது, ஒருவரை யானை தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் காயமடைந்த விரிவுரை கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *