Saturday , September 26 2020
Breaking News

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2724 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2724 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு நேற்றிரவு தகவல் வெளியிட்டுள்ளது.

நேற்று புதிதாக 20 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்தே இந்த அதிகரிப்பு ஏற்பட்டதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

நேற்று இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் 16 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளனர்.

கட்டாரில் இருந்து திரும்பிய 3 பேரும், இந்தியாவில் இருந்து திரும்பிய 2 பேரும், ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து திரும்பிய 2 பேரும், சவூதி அரேபியாவில் இருந்து திரும்பிய 9 பேரும் நேற்று தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேவேளை, கந்தகாடு புனர்வாழ்வு முகாம் தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த நான்கு பேரும் தொற்றுக்குள்ளாகியிருப்பதாக நேற்று இனங்காணப்பட்டுள்ளனர்.

இவர்கள், கஹதுடுவ மற்றும் பெல்மதுல்ல தனிமைப்படுத்தல் முகாம்களில் இருந்த போதே தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

இதனையடுத்து கந்தகாடு கொத்தணியில் இருந்து தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 561 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *