Friday , September 25 2020
Breaking News

பிரபாகரன் ஆயுதத்தால் பெற முயற்சித்த நாட்டை, பேனாவால் எழுதிக் கொடுக்கமாட்டோம் – பிரதமர் மகிந்த தெரிவிப்பு.

“விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஆயுதத்தால் பெற முயற்சித்த தனிநாட்டை, பேனாவால் எழுதிக் கொடுக்க நாங்கள் தயாராக இல்லை என்று பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மொனராகல மாவட்டத்தில் உள்ள செவனகலவில் நேற்று நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“இந்த தேர்தலில் மூன்றில் இரண்டு அதிகாரத்தை பெற்றுக் கொள்வது அவசியம்.அதன் மூலம்,
அரசியலமைப்பை மாற்ற, நாட்டிற்கு பொருத்தமான, ஒற்றுமையை பாதுகாப்பதற்கான புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம்

பிரபாகரன் துப்பாக்கியால் பெற முயற்சித்த நாட்டை பேனையில் வழங்க நாங்கள் தயாரில்லை.” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *