Saturday , September 26 2020
Breaking News

தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருப்பவர்கள் வாக்களிப்பதற்கான வசதிகள் – தேர்தல்கள் ஆணைக்குழுவிசேட கூட்டம்

தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருப்பவர்கள் மற்றும் சுயதனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் வாக்களிப்பதற்கான வசதிகளை செய்து கொடுப்பதற்கான வசதிகளை செய்து கொடுப்பது குறித்து, தேர்தல்கள் ஆணைக்குழு நாளை விசேட கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளது.

இந்தக் கூட்டத்துக்கு, சுகாதார நிபுணர்களும், பொலிஸ் அதிகாரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தனிமைப்படுத்தலில் உள்ளவர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குவது குறித்தும், தனியான நாள் ஒன்றில் வாக்களிப்பதற்கு அனுமதிப்பது குறித்தும் ஆராயப்பட்டது.

எனினும் தனிமைப்படுத்தல் சட்டத்தின்படி, அவர்கள் வெளியே வர முடியாது என்பதால் மாற்றுத் திட்டங்கள் குறித்து ஆராயப்படவுள்ளது.

இதற்காக நடமாடும் வாக்களிப்பு நிலையங்களை அமைப்பது குறித்து ஆராய்வதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது, எனினும், இதுதொடர்பான சூழ்நிலைகளை ஆராய்ந்து இந்த விடயம் குறித்தும் நாளை முடிவு ஒன்று எட்டப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *