Monday , September 28 2020
Breaking News

ஒரே நாளில் 3 திமுக எம்எல்ஏக்களுக்கு கொரோனா – தமிழக அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சி.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 3 திமுக எம்எல்ஏ.க்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது தமிழக அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

63 வயதுடைய கிருஷ்ணகிரி தொகுதி, தி.மு.க., எம்.எல்.ஏ. செங்குட்டுவன், காய்ச்சலை அடுத்து ஓசூரிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு, நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், கொரோனா உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

செங்குட்டுவனுக்கு ஏற்கனவே, இருதய சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதால் அவரது உடல் நிலை குறித்து மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, வேலூர் திமுக எம்எல்ஏ கார்த்திகேயனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியானதை அடுத்து அவர் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், ராணிப்பேட்டை திமுக எம்.எல்.ஏ., ஆர்.காந்திக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.

ஒரே நாளில் அடுத்தடுத்து 3 திமுக எம்.எல்.ஏ.,க்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது அரசியல் வட்டாரத்தில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *