Thursday , September 24 2020
Breaking News

அசாமில், கடும் மழை காரணமாக, காசிரங்கா தேசிய பூங்கா வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

அசாமில், கடும் மழை காரணமாக, காசிரங்கா தேசிய பூங்கா வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அங்கிருந்த, ஒன்பது காண்டாமிருகங்கள் உள்ளிட்ட, 108 வன விலங்குகள், தண்ணீரில் மூழ்கி உயிரிழந்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

பிரம்மபுத்ரா நதியின் நீர்மட்டம், உயர்ந்துள்ளது. இதையடுத்து, 26 மாவட்டங்களில் உள்ள, 2,700 கிராமங்கள், முழுமையாக வெள்ளத்தில் சிக்கியுள்ளன.

இந்த கிராமங்களை சேர்ந்த, 28 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், 1.17 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

மழை வெள்ளத்தால், இதுவரை, 79 பேர் இறந்துள்ளனர். வெள்ள பாதிப்பில் சிக்கியவர்களை மீட்க, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல்வேறு பகுதிகளில், 650 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, அவற்றில், 48 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

காசிரங்கா தேசிய பூங்கா மற்றும் புலிகள் சரணாலய பகுதியும், வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தேசிய பூங்காவின், 85 சதவீத பகுதி, முழுமையாக வெள்ளத்தில் சிக்கியுள்ளது. இதனால் தண்ணீரில் மூழ்கி ஒன்பது காண்டாமிருகங்கள், காட்டெருமைகள், மலைப்பாம்பு, காட்டுப்பன்றிகள், முள்ளம்பன்றிகள், சதுப்பு நில மான்கள் உள்ளிட்ட, 108 வன விலங்குகள் இறந்துள்ளன.

வெள்ளத்தில் சிக்கிய, 134 விலங்குகள் மீட்கப்பட்ட நிலையில், 110 விலங்குகள் பாதுகாப்பான வனப் பகுதியில் விடப்பட்டுள்ளன.

தேசிய பூங்காவில் இருந்து வெளியேறியபோது, வாகனங்கள் மோதியதால் காயமடைந்த, ஒரு வயது பெண் காண்டாமிருகம் உள்ளிட்ட, எட்டு விலங்குகளுக்கு, வன விலங்கு பாதுகாப்பு மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக செய்திகள் கூறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *