Tuesday , September 29 2020
Breaking News

கொரோனா தாக்கம் முடியும் வரை சிறார்கள் பாடசாலை செல்லக்கூடாது – ஐரோப்பிய நாடுகளில் கட்டாய உத்தரவு

கொரோனா தாக்கம் முடியும் வரை சிறார்கள் பாடசாலை செல்லக்கூடாது என ஐரோப்பிய நாடுகளில் கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதும், சுவீடனில் சிறார்களுக்கான பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளன.

ஏனைய ஐரோப்பிய நாடுகளில் பாடசாலைகள் இன்னும் திறக்கப்படவில்லை. ஸ்வீடனில் பாடசாலை செல்லும் சிறார்கள் மூலமாக பரவ வாய்ப்பில்லை என ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த முடிவுகள் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளன. இந்த ஆராய்ச்சிக்காக பின்லாந்து, ஸ்வீடன் ஆகிய இரு நாடுகளில் கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. பின்லாந்தில் சமூக விலகல் கடுமையாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அதேவேளை ஸ்வீடனில் அவ்வளவாகக் கடைப்பிடிக்கப்படவில்லை.

ஊரடங்கும் சற்று தளர்த்தப்பட்டது.
ஒரு வயதிலிருந்து 19 வயது குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் இடையே இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இவர்கள் மூலமாக சமூகப்பரவல் ஆகும் வாய்ப்பு மிக குறைவு என்று அந்த ஆய்வு கூறுகிறது.

இந்த ஆய்வின் முடிவுகள் ஸ்வீடன் நாட்டின் தேசிய சுகாதார நிறுவனத்தின் இதழில் வெளியிடப்பட்டுள்ளன.

மேலும் பின்லாந்தின் சுகாதார மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகமும் இதனை வெளியிட்டுள்ளது.

ஏனையவர்களை விட சிறார்கள் பாடசாலைகளில் ஆசிரியர்களாக பணிபுரிபவர்கள் மூலம் பரவுவது குறைவு என இந்த ஆய்வு கூறுகிறது.

20 வயதுக்கு மேற்பட்டவர்கள் சமூகப் பரவலுக்கு உதவும் அளவுக்கு சிறார்கள் உதவமாட்டார்கள்.

சிறார்கள் மூலமாக பெரியவர்களுக்கு கொரோனா பரவும் அபாயம் மிகக் குறைவு அல்லது முற்றிலும் இல்லாதது என்றே கூறலாம் என்கிறது இந்த ஆய்வு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *