Friday , September 25 2020
Breaking News

வட கொரியா தலைவர் கிம் ஜொங் உன் தலைமையில் உயர்மட்டபாதுகாப்புக் கூட்டம்

வட கொரியா தலைவர் கிம் ஜொங் உன் தலைமையில் உயர்மட்டபாதுகாப்புக் கூட்டம் பிரமாண்டமான முறையில் நடைபெற்றுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

இராணுவத்தின் திறனை உயர்த்துவது மற்றும் போர் தடுப்பு நடவடிக்கைகளை பலப்படுத்துவது தொடர்பாக இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டதாக வடகொரிய அரசு ஊடகமான கே.என்.சி.ஏ. செய்தி வெளியிட்டுள்ளது.

கொரிய தீபகற்பத்தில் உள்ள சிக்கலான நிலைமையை கருத்தில் கொண்டு வடகொரியா இராணுவத்தின் திறனை அதிகரிப்பது மற்றும் துருப்புகளை அணிதிரட்டுவதற்கான தயார் நிலை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் போர் தடுப்பு நடவடிக்கைகளை உயர்த்துவது மற்றும் சாத்தியமான இராணுவ அச்சுறுத்தலை எதிர் கொள்வது போன்ற முக்கிய பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.

மத்திய இராணுவ ஆணையத்தின் துணைத் தலைவர் ரி பியோங் சோல் உள்ளிட்ட உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

அவர்கள் இராணுவ உற்பத்தி தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் ஆலோசனை நடத்தினர். கூட்டத்திற்குப் பின்னர் தலைவர் கிம் ஜொங் உன் பல முக்கிய உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார் என்றும், வடகொரிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *