Friday , September 25 2020
Breaking News

இலங்கை அரசியல் கட்சிகளுடன் சீன பிரதிநிதிகள் இரகசிய பேச்சு – உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதாக இந்திய ஊடகம் பரபரப்புக் குற்றச்சாட்டு.

இலங்கையின் உள்நாட்டு அரசியலில் சீனா தலையீடு செய்வதாகவும்,
பொதுத் தேர்தல் நடக்கவுள்ள சூழலில் அரசியல் கட்சிகளுடன் சீன
பிரதிநிதிகள் பேச்சுக்களை நடத்தி வருவதாகவும் இந்தியா ஊடகம் ஒன்று
தகவல் வெளியிட்டுள்ளது. ஏனையவர்களை வெளியேற்றி விட்டு இலங்கையில் ஆழமாக கால்பதிக்க சீனா விரும்புகிறது எனக் குறிப்பிட்டுள்ள இந்திய ஊடகம், அதற்காக இலங்கை அரசியலிலும் தலையீடு செய்வதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.

இலங்கையில் பொதுத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் சீனா பரந்தளவில்
அரசியல் கூட்டாளிகளை உருவாக்கி வருகிறது என்றும், சீனாவின்
பிரதிநிதிகள் முன்னணி அரசியல் கட்சிகளுடன் கூட்டங்களை நடத்தி
வருகின்றனர் என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறான சில கூட்டங்கள் மூடிய அறைக்குள் இடம்பெறுவதாகவும்,
சில கூட்டங்கள் வெளிப்படையாக இடம்பெறுவதாகவும் இந்திய ஊடகம்
செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையின் எல்லா அரசியல் கட்சிகளுடனும் சீனா தொடர்புகளை
ஏற்படுத்தியிருப்பதாகவும், இந்த தேர்தலில் யார் தெரிவு செய்யப்பட்டாலும்,
சீனாவே வெற்றியாளராக இருக்கும் என்றும் இந்திய ஊடகம் மேலும்
குறிப்பிட்டுள்ளது.

இந்திய ஊடகத்தின் இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக சீனத் தரப்பில்
இருந்து இதுவரை எந்தக் கருத்தும் வெளியிடப்படவில்லை.
எனினும், இலங்கையின் உள்நாட்டு அரசியலில் தாம் ஒருபோதும்
தலையீடு செய்வதில்லை என்று சீனா முன்னர் பலமுறை கூறியிருந்ததும்
குறிப்பிட்டத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *