Monday , September 28 2020
Breaking News

சமஷ்டியை கோரினால் வடக்கு, கிழக்கில் இரத்த ஆறு ஓடும் – கடும்போக்குவாத பௌத்த பிக்குகள் எச்சரிக்கை.

அரசாங்கம் வழங்கும் தீர்வை ஏற்றுக்கொண்டு தமிழர்கள் அமைதியாக
இருக்க வேண்டும் என்றும் சமஷ்டியை கோரினால் வடக்கு, கிழக்கில்
இரத்த ஆறு ஓடும் என்றும் கடும்போக்குவாத பௌத்த பிக்குகள்
எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பொது பலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார
தேரர், இத்தானந்தே சுகத தேரர், கலாநிதி ஓமல்பே சோபித தேரர்
ஆகியோரே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.தன்னாட்சி உரிமை கொண்ட சமஷ்டி அடிப்படையிலான தீர்வை முன்வைத்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ள நிலையிலேயே அவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர்.

அரசாங்கம் வழங்கும் தீர்வை ஏற்றுக்கொண்டு தமிழர்கள் அமைதியாக
இருக்கவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழர்களுக்கு சமஷ்டி முறையில் தீர்வு வழங்க தாம் ஒருபோதும்
அனுமதிக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ள அவர்கள் தனிநாடு
கோரி மீண்டும் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் வடக்கு, கிழக்கில்
இரத்த ஆறுதான் ஓடும் என்றும் எச்சரித்துள்ளனர்.

மீண்டும் அப்படியான ஒரு நிலைமை ஏற்படுவதை தாம் விரும்பவில்லை
என்றும் ராஜபக்சக்களின் இந்த ஆட்சிக் காலத்தில் அரசாங்கத்துடனும்
சிங்கள மக்களுடனும் ஒன்றிணைந்து பயணிக்க தமிழ் மக்கள் முன்வர
வேண்டும் என்றும் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இது சிங்கள பௌத்த நாடு என தெரிவித்த அவர்கள், தமிழர்கள்
தனிவழியில் நிற்காமல் சிங்கள மக்களுடன் இணைந்து பயணிக்க
வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். பிரபாகரனின் சிந்தனையில் செயற்படுவதை தமிழ் மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் நிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *