Monday , September 28 2020
Breaking News

முன்னாள் போராளிகள் அச்சுறுத்தப்படுகின்றனர் – யாழ்ப்பாண மாவட்ட முதன்மை வேட்பாருமான விஜயகலா மகேஸ்வரன்

முன்னாள் போராளிகள் அச்சுறுத்தப்படுகின்றனர் என்று முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட முதன்மை வேட்பாருமான விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். பளை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற பிரசாரக் கூட்டமொன்றில் உரையாற்றிய போது அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

முன்னாள் போராளிகள் மீண்டும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் நிலை காணப்படுகிறது எனக் கூறிய அவர், போர் முடிவடைந்த பின்னர் இருந்த நிலைமையை போன்று சூழல் தற்போதும் உருவாகியுள்ளது என்றும் குறிப்பிட்டார். வீடுகளுக்கு செல்லும் புலனாய்வாளர்களால் முன்னாள் போராளிகள் அச்சுறுத்தப்படுகின்றனர் என்றும் விஜயகலா மகேஸ்வரன் குறிப்பிட்டார்.

மேலும், முன்னாள் போராளிகள் தொடர்பான விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன என்றும் இதனால் முன்னாள் போராளிகளின் குடும்பங்கள் மிகவும் அச்சத்தில் வாழ்ந்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *