Monday , September 28 2020
Breaking News

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய ஆளும்கட்சி அரசியல்வாதிகள்

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய ஆளும்கட்சியின் நான்கு அரசியல்வாதிகளால் கொரானா தொற்று பரவும் ஆபத்து உள்ளதாக பொது சுகாதார அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் உபுல் றோகண தெரிவித்துள்ளார்.

மரணச்சடங்கு ஒன்றில் கலந்து கொண்டதால் இந்த நான்கு அரசியல்வாதிகளுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட கந்தக்காடு புனர்வாழ்வு முகாமில் பணியாற்றும் ஆலோசகர் ஒருவர், பங்கேற்ற மரணச்சடங்கில் இவர்களும் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த 4 பேரும் எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுகின்றனர். எனினும் அவர்களில் ஒருவர் மட்டுமே தனிமைப்படுதலில் உள்ளதாகவும் பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கத் தலைவர் உபுல் ரோகண தெரிவித்துள்ளார். ஏனைய 3 பேரும் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் அவர்களால் சமூகத்துக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *