Monday , September 28 2020
Breaking News

தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 3 வேட்பாளர்கள் கைது

தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட இடங்களில் 3 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம், குருநாகல, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் போட்டியிடும் மூன்று வேட்பாளர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் கூறியுள்ளனர்.

தேர்தல் சட்டங்களை மீறியது தொடர்பாக, 207 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 222 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் தரப்பு கூறியுள்ளது.

அதேவேளை தேர்தல் சட்டங்களை மீறிய பொலன்னறுவ, ஜாஎல பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த 5 பொலிசாருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *