Monday , September 28 2020
Breaking News

ஓகஸ்ட் 5ஆம் திகதி அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டுகிறார் மோடி.

இந்தியாவில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோயிலுக்கான அடிக்கல்லை, எதிர்வரும் ஓகஸ்ட் 5ம் திகதி பிரதமர் நரேந்திர மோட நாட்டவுள்ளார் என்று, ஸ்ரீ ராம ஜன்ம பூமி தீர்த்தஷேத்திர அறக்கட்டளை பொருளாளர் தெரிவித்துள்ளார்.

அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்காக, ஸ்ரீ ராம ஜன்ம பூமி தீர்த்தஷேத்திர அறக்கட்டளையை மத்திய அரசு அமைத்துள்ளது. கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, ஓகஸ்ட் 5ம் திகதி நடத்தப்படும் எனவும், பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பங்கேற்பதற்காக அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட உள்ளது.
இது தொடர்பாக ஸ்ரீ ராம ஜன்ம பூமி தீர்த்தஷேத்திர அறக்கட்டளையின் பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரி கூறுகையில், ராமர் கோவிலுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டும் நிகழ்வுக்கு அனைத்து மாநில முதல்வர்களும் அழைக்கப்படுவார்கள். என்று தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சியில் சமூக இடைவெளியை உறுதி செய்வதற்காக, 150 அழைப்பாளர்கள் உட்பட 200
க்கும் மேற்பட்டவர்கள் இருக்கக்கூடாது என முடிவு செய்திருப்பதாகவும், அவர்
கூறியுள்ளார்.

ராமர் கோவில் கட்டும் விவகாரம், அயோத்தியில் நீண்டகாலமாக சர்ச்சைக்குரிய பிரச்சினையாக இருந்து வந்துள்ளது.
எனினும் அண்மையில் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு அமைய ராமர் கோவில் கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *