Monday , September 28 2020
Breaking News

ஹூஸ்டனில் உள்ள சீன தூதரகத்தை உடனடியாக மூடுமாறு அமெரிக்கா உத்தரவு.

ஹூஸ்டனில் உள்ள சீன தூதரகத்தை உடனடியாக மூடுமாறு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.

ஹொங்கொங்கில் சீனாவின் பாதுகாப்பு சட்டங்களை அமுல்படுத்தியது, ஜின்ஜியாங் மாகாணத்தில் முஸ்லீம்கள் மீதான தாக்குதல் மற்றும் தென் சீன கடலில் ஆதிக்கம் செலுத்த நினைப்பது ஆகியவற்றால், சீனா மீது அமெரிக்கா ஆத்திரமடைந்துள்ளது.

இந்த நிலையில், அமெரிக்காவின் அறிவார்ந்த சொத்துரிமை மற்றும் தனிநபர் இரகசிய பாதுகாப்புக்காக ஹுஸ்டனில் உள்ள சீன துணை தூதரகத்தை மூட வேண்டும் என கூறி அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, ஹுஸ்டன் சீன துணை தூதரக வளாகத்தில் சீன அதிகாரிகள் ஆவணங்களை தீயிட்டு எரித்ததாக செய்தி வெளியாகி உள்ளது.

ஹூஸ்டனில் உள்ள சீன தூதரகத்தை 72 மணி நேரத்திற்குள் மூடுவதற்கு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ள சீனா, இது சர்வதேச சட்டத்தை மீறுவதாகும் என்று தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *