Saturday , September 26 2020
Breaking News

ஏவி டாங்கியை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனையை இந்தியா வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

ஹெலிகொப்டரில் இருந்து ஏவி டாங்கியை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனையை இந்தியா வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

ஒடிசா பாலசோரில் கடந்த 16 மற்றும் 17ஆம் திகதிகளில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

துருவஸ்ட்ரா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஏவுகணை, ஹெலிகொப்டரில் பொருத்தப்பட்டு, டாங்கிகளை தாக்கி அழிக்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

எனினும், பாலசோரில் நடத்தப்பட்ட சோதனையின் போது, ஹெலிகொப்டரில் இருந்து சோதனை நடத்தப்படவில்லை.

தரையில் இருந்தே சோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும் அடுத்த கட்டமாக இது ஹெலிகொப்டரில் இருந்து ஏவி சொதனை நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *