Tuesday , September 29 2020
Breaking News

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானியிடம் 100 கேள்விகளை எழுப்பி திணறடித்த நீதிபதிகள்.

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில், பாபர் மசூதி இடிப்பு வழக்கில், பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்கே. அத்வானியிடம் நேற்று நீதிமன்றத்தில் நான்கரை மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
அவரிடம் நீதிபதிகளால் 100க்கு அதிகமான கேள்விகள் கேட்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

அயோத்தியில், 1992ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இது தொடர்பாக, பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் எல்கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட, 32 பேருக்கு எதிராக, வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை, லக்னோவில் உள்ள, சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

பாரதீய ஜனதா கட்சி., மூத்த தலைவராக எல்கே அத்வானி நேற்று வீடியோ கொன்பஓட்டங்ஸ் மூலமாக வாக்குமூலம் பதிவு செய்தார். அவரிடம் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதிகள் சுமார் நான்கரை மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.

காலை 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை, அவரிடம் 100க்கும் அதிகமான கேள்விகளை நீதிபதிகள் கேட்டனர். எனினும், தன்மீது மீது கூறப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் அத்வானி மறுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *