Saturday , September 26 2020
Breaking News

மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் 248 ஓட்டங்களுடன் வலுவான நிலையில் இங்கிலாந்து அணி.

மான்செஸ்டர் நகரில், நேற்று தொடங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 258 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்து – மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, மான்செஸ்டர் எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்டில் நேற்று தொடங்கியது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கப்டன் ஜேசன் ஹோல்டர் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து இங்கிலாந்து அணியின் டொமினிக் சிப்லி, ரோரி பேர்ன்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

சிப்லி ஓட்டங்கள் ஏதும் எடுக்காமல் கேமர் ரோச் பந்தில் டக்அவுட் ஆனார்.

அடுத்து வந்த கப்டன் ஜோ ரூட் 17 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார்.
2-வது டெஸ்டில் சதம் விளாசிய பென் ஸ்டோக்ஸ் 20 ஓட்டங்களுடன், திரும்பினார்.
மறுபக்கம் விளையாடிய ரோரி பேர்ன்ஸ் அரைசதம் அடித்த போதும், 57 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

இங்கிலாந்து அணி 122 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறிய நிலையில், ஐந்தாவது விக்கெட்டுக்கு ஒல்லி போப் உடன் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் ஜோடி சேர்ந்தார்.

இந்த ஜோடி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இங்கிலாந்து அணி 85.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 258 ஓட்டங்கள் எடுத்திருக்கும்போது முதல் நாள் ஆட்டம் முடிவிற்கு வந்தது.

ஒல்லி போப் 91 ஓட்டங்களுடனும், ஜோஸ் பட்லர் 56 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பில் கேமர் ரோச் 2 விக்கெட்டும், சேஸ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இன்று இரண்டாவது நாள் ஆட்டம் இடம்பெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *