Friday , September 25 2020
Breaking News

ஆசனப் பட்டி அணியாமல், காரைச் செலுத்தியதாக நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழக பொலிசாரால், 100 ரூபா அபராதம்.

ஆசனப் பட்டி அணியாமல், காரைச் செலுத்தியதாக நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழக பொலிசாரால், 100 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா தொற்றைத் தடுக்கும் நோக்கில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், சென்னையில் உள்ளவர்கள் ஏனைய மாவட்டங்களுக்கு செல்வதற்கு அரசிடம் முறையாக இ- பாஸ் பெற வேண்டும்.
திருமணம், இறப்பு மற்றும் அவசர மருத்துவ தேவைகளுக்காக மட்டுமே, இ – பாஸ் வழங்கப்படுகிறது.

எனினும் நடிகர் ரஜினிகாந்த் அவரது பண்ணை வீடு அமைந்துள்ள கேளம்பாக்கத்திற்கு, கடந்த புதன்கிழமை அவசர மருத்துவ தேவைக்காக இ – பாஸ் பெற்றுச் சென்றது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அத்துடன் கடந்த ஜூன் மாதம் 20ம் திகதி, கேளம்பாக்கம் செல்லும் போது, ஆசனப் பட்டி அணியாமல் கார் ஓட்டியதாக, ரஜினிகாந்துக்கு பொலிசார் அபராதம் விதித்த தகவலும், தற்போது வெளியாகியுள்ளது.

சென்னை மாநகர பொலிஸ் எல்லையை கடந்து, செங்கல்பட்டு பொலிஸ் எல்லைக்குள் நுழைந்தபோது, ஆசனப் பட்டி அணியாமல், கார் ஓட்டிய அவருக்கு, தாழம்பூர் பொலிசார் அபராதம் விதித்துள்ளனர்.
இந்த தகவல், தற்போது, இ – பாஸ் கேட்டு, ரஜினிகாந்த் விண்ணப்பித்த போது தான் தெரிய வந்துள்ளது.

அவரது விண்ணப்பத்தை பரிசீலிக்கும் போது, அவருக்கு தாழம்பூர் பொலிசார் அபராதம் விதித்துள்ளதும், அந்த அபராத தொகையை, அவர் செலுத்தாமல் இருப்பதும் கண்டு அறியப்பட்டது.

இதையடுத்து, அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. உடனடியாக, அவர் அந்த அபராதத்தை செலுத்திய பின், அவருக்கு, இ – பாஸ் வழங்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *