Monday , September 28 2020
Breaking News

புதிய நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொள்ளும் நிகழ்வை நடத்துவதில் சிக்கல்.

வரும் ஓகஸ்ட் 5ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை அடுத்து, புதிய நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொள்ளும் நிகழ்வை நடத்துவதில் சிக்கல்கள் எழுந்துள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கொரோனா தடுப்புக்கான சுகாதார வழிகாட்டல் முறைகளுக்கு அமைய இந்த நிகழ்வை நடத்துவதிலேயே நாடாளுமன்ற அதிகாரிகள் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.

இதன்போது, நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகள், தனிமைப்படுத்தல் சட்டவிதிகள் என்பனவற்றுக்கிடையில் மோதல்கள் ஏற்படும் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளின் படி புதிய நாடாளுமன்றம் கூடும் போது, அனைத்து உறுப்பினர்களுக்கும் ஆசனங்கள் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் சுகாதார தனிமைப்படுத்தல் சட்டத்தின்படி சமூக இடைவெளி இருக்க வேண்டும்.

தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு அமைய, எல்லா உறுப்பினர்களுக்கும் சமூக
இடைவெளியுடன் ஆசனங்களை ஒதுக்கிக் கொடுக்க நாடாளுமன்ற அவையில் இடவசதி போதாது என்று நாடாளுமன்ற அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

நாடாளுமன்றத்தில் 225 உறுப்பினர்களுக்காக, இரண்டு பக்கங்களிலும் தலா 116 ஆசனங்கள் என்ற வகையில், 232 ஆசனங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒரு வரிசையில் 20 உறுப்பினர்கள் அமர முடியும். சமூக இடைவெளியைப் பின்பற்றினால் ஒரு வரிசையில் 8 அல்லது 10 உறுப்பினர்களே அமரமுடியும்.

இதன் மூலம், ஒவ்வொரு பக்கங்களிலும் உள்ள தலா 5 வரிசைகளிலும், 40 அல்லது 50 உறுப்பினர்களையே அமர வைக்க முடியும் என்றுநாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

இதனால் சுகாதார வழிகாட்டு முறைகளுக்கு அமைய ஆசனங்களைஒதுக்கவது பெரும் சிக்கலாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *