Saturday , September 26 2020
Breaking News

பிலிப்பைன்சில் இராணுவ ஹெலிகொப்டர் ஒன்று விழுந்து நொருங்கியது.

பிலிப்பைன்சில் இராணுவ ஹெலிகொப்டர் ஒன்று விழுந்து நொருங்கியதில் 4 படையினர் உயிரிழந்துள்ளனர்.

பிலிப்பைன்சின் வடக்கு பகுதியில் உள்ள இசபெல்லா மாகாணத்தில் ஹவாயன் நகரிலுள்ள விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு இராணுவ ஹெலிகொப்டர் ஒன்று பயிற்சிக்காக புறப்பட்டு சென்றது.

இந்த ஹெலிகொப்டரில் 2 விமானிகள் உட்பட 5 இராணுவத்தின் பயணம் செய்தனர். புறப்பட்டு சென்ற சிறிது நேரத்திலேயே அந்த ஹெலிகொப்டர் திடீரென விழுந்து நொருங்கியது.

இந்த கோர விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 4 இராணுவத்தினர்சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஒருவர் மட்டும் படுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இது குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் இராணுவம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *