Saturday , September 26 2020
Breaking News

மரத்தடியில் நடந்த சட்டசபை கூட்டம்!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால், சட்டசபையின் மைய மண்டபம் மூடப்பட்டதை அடுத்து, வரலாற்றில் முதன்முறையாக, மரத்தடியில் சட்டசபை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. புதுச்சேரி சட்டசபையின் வரவுசெலவுத் கூட்டத்தொடர் கடந்த 20ம்திகதி ஆரம்பமாகிய நிலையில், சட்டசபை கூட்டங்களில் பங்கேற்ற, பிரதான எதிர்கட்சியான என்.ஆர்.காங்கிரசை சேர்ந்த உறுப்பினர் ஜெயபால், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. உடனடியாக, அவர் மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து, சட்டசபையின் மைய மண்டபத்தில், கிருமி நாசினி தெளிக்கப்பட்டதுடன், முழுவதுமாக மூடப்பட்டுள்ளது. இந்தநிலையில், முதல்வர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினர். சட்டசபை வளாகத்தில், வாகனங்கள் நிறுத்தும் இடத்தில், சட்டசபையை நடத்துவது என்றும், வரவுசெலவுத் திட்டம் மீது பொது விவாதம் நடத்தி, சபையின் ஒப்புதலை பெறுவது என, முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, சட்டசபை வளாகத்தின் முகப்பில், வேப்ப மரத்தடியில் தற்காலிக பந்தல் அமைக்கப்பட்டு, பந்தலின் நடுவில் சபாநாயகருக்கு ஆசனம் அமைக்கப்பட்டது. அவருக்கு இரண்டு பக்கத்திலும், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு, சமூக இடைவெளியுடன் ஆசனங்கள் போடப்பட்டன. திறந்தவெளியில் நேற்று மதியம், 1:30 மணிக்கு தொடங்கிய சட்டசபை கூட்டம், மாலை, 3:45 மணிக்கு நிறைவடைந்தது. இதையடுத்து சபையை காலவரையின்றி ஒத்திவைப்பதாக, சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார். வரலாற்றில் முதன் முறையாக மரத்தடியில், சட்டசபை கூட்டம் நடந்து முடிந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *