Friday , September 25 2020
Breaking News

சீனா, பாகிஸ்தான் குறித்த பாதுகாப்புத் தகவல்களை இந்தியாவுக்கு கொடுக்கிறது எமிசாட் செயற்கைக்கோள்.

திபெத்தில் சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின் நடமாட்டம் குறித்து, இந்தியா தனது எமிசாட் செயற்கை கோள் மூலம் தகவல்களைப் பெற்றுவருவதாக கூறப்படுகிறது.

இஸ்ரோ மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு சார்பில் இந்தியாவின் முதலாவது உளவு செயற்கை கோளான எமிசாட் கடந்த ஆண்டு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏப்ரலில் விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்திய இராணுவத்திற்கு தேவையான தகவல்களை பெற்றுக் கொள்ளும் பணியில் இந்த செயற்கைக் கோள் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.
அருணாசல பிரதேச மாநிலத்தை ஒட்டி உள்ள திபெத்தை சீனா ஆக்கிரமித்துள்ளது.

ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதியில் சீன மக்கள் விடுதலை இராணுவம் என்றழைக்கப்படும் சீன இராணுவத்தினர் செயற்பாடுகள் குறித்து எமிசாட் செயற்கை கோள் இந்திய இராணுவத்திற்கு தகவல்களை அளித்து வருகிறது, அத்துடன், பாகிஸ்தானிற்கு சொந்தமான ஜின்னா கடற்படைத் தளத்தில் சீனாவின் உதவியுடன் பாகிஸ்தான் நீர்மூழ்கி கப்பலை தயாரித்து வரும் நலையில், அங்கு சீனாவின் நீர்மூழ்கி கப்பல்கள் வருகை தந்துள்ளதையும், எமிசாட் செயற்கை கோள் கண்டறிந்துள்ளது.

மேலும், சீன இராணுத்தின் முதலாவது கடல்கடந்த இராணுவ தளமான ஜிபூட்டி கடல்பகுதியில் மூன்று போர் கப்பல்களை சீனா நிறுத்தி வைத்துள்ளதையும், எமிசாட் கண்டறிந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *