Saturday , September 26 2020
Breaking News

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 399 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து.

மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றி பெறுவதற்கு, 399 ஓட்டங்களை இங்கிலாந்து அணி வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

இங்கிலாந்து – மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் மான்செஸ்டர் எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்டில் நடைபெற்று வருகிறது.

முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 369 ஓட்டங்கள் குவித்த நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் முதல் இன்னிங்சை தொடங்கியது.

2-வது நாள் ஆட்ட முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் அணி6 விக்கெட் இழப்பிற்கு 137 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

ஜேசன் ஹோல்டர் 24 ஓட்டங்னுடனும், டவ்ரிச் 10 ஓட்டங்னுடனும் களத்தில் இருந்தனர். நேற்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கிய போது. ஜேசன் ஹோல்டர் 46 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஸ்டூவர்ட் பிராட் பந்தில் ஆட்டமிழந்தார்.

டவ்ரிச் 37 ஓட்டங்னில் வெளியேற மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் இன்னிங்சில் 197 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது,இங்கிலாந்து அணி சார்பில் ஸ்டூவர்ட் பிராட் 6 விக்கெட்டுகள் அள்ளினார்.

இதையடுத்து, 172 ஓட்டங்கள் முன்னிலைப் பெற்றிருந்த இங்கிலாந்து 2-வது இன்னிங்ஸை தொடங்கியது.

தொடக்க வீரர்களான ரோரி பேர்ன்ஸ், டொமினிக் சிப்லி ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிப்லி 56 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து கப்டன் ஜோ ரூட் களம் இறங்கினார். இவர் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ரோரி பேர்ன்ஸ் 90 ஓட்டங்களில் ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 226 ஓட்டங்கள் எடுத்த நிலையில் 2-வது இன்னிங்சை முடித்துக் கொண்டது.

ஜோ ரூட் 56 பந்தில் 68 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதனால் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு 399 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

399 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் 10 ஓட்டங்களைப் பெறுவதற்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்துள்ளது.

இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில், மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றி பெறுவது கடினம் என்றுகூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *