Wednesday , September 30 2020
Breaking News

அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவிலுக்கு கீழ் 2000 அடி ஆழத்தில் புதைக்கப்படுகிறது ரைம் கப்சூல்.

அயோத்தியில் ராமர் கோவில் மற்றும் ராமர் ஜென்ம பூமியின் வராலாற்றை எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்ளும் வகையில், தற்போது கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலுக்கு அடியில் 2000 அடி ஆழத்தில் கால மாத்திரை எனப்படும், ரைம் கப்சூல் ஒன்று புதைக்கப்படும் என ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகம் அறிவித்துள்ளது.

ரைம் கப்சூல் புதைக்கப்படுவதால் எதிர்காலத்தில் ராமர் ஜென்ம பூமி குறித்து எந்தவித சர்ச்சையும் ஏற்படாமல் தடுக்க முடியும் என்று நம்பப்படுகிறது.

முக்கியமான தகவல்களை எதிர்காலத் தேவைக்காக பாதுகாப்பதே ரைம் கப்சூல் ஆகும்.
தற்கால நிகழ்வுகள், தகவல்கள், வரலாற்று குறிப்புகள், ஆவணங்கள் மற்றும் புகைப்படங்கள் ஆகியவற்றை எதிர்கால சந்ததியினரும் தெரிந்து கொள்ள வேண்டும் எனும் நோக்கில், எளிதில் உடையாத வலிமையான குடுவைக்குள் வைத்து புதைக்கப்படும்.

இதன் மூலம் நிகழ்கால தகவல்களை எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்ள முடியும்.

கடந்த 2019 ம் ஆண்டு அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தீர்ப்பில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கியது. அத்துடன் மூன்று மாதத்திற்குள் ராமர் கோவில் கட்டுவதற்குரிய அறக்கட்டளையையும் மத்திய அரசு அமைக்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா எனும் அறக்கட்டளையை மத்திய அரசு ஏற்படுத்தியது. அயோத்தியில் வரும் 5ம் திகதி பூமி பூஜை தொடங்குகிறது.

இந்த நிலையில், அறக்கட்டளை உறுப்பினர் காமேஸ்வர் சவுபால் கூறும் போது, அயோத்தி வழக்கில் நடந்த சட்டப் போராட்ட நிகழ்வுகளை எதிர்கால சந்ததியினரும் அறிந்து கொள்ள வேண்டும்.

அதனால் கோவிலுக்கு அடியில் 2000 அடி ஆழத்தில் ராமர் கோவில் பற்றிய தகவல்கள் அடங்கிய ரைம் கப்சூலை வைக்கப் போகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *