Tuesday , September 29 2020
Breaking News

முப்படையினரை தயார் நிலையில் வைக்கப் போவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் அறிவிப்பு.

தேர்தலுடன் தொடர்புடைய ஏதாவது வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றால், அதனை முறியடிப்பதற்கு முப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்படவுள்ளனர் என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஏதேனும் ஒரு தொகுதியில் வன்முறை இடம்பெற்றால், குறித்ததொகுதியில் வாக்களிப்பை ரத்து செய்வது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு சிந்திக்காது என்றும் வேறொரு திகதியில் அங்கு வாக்களிப்பு நடத்தப்படும் என்றும் மகிந்த தேசப்பிரிய குறிப்பிட்டார்.

தேவைப்பட்டால் அவசர உதவிக்கு அழைக்கும் வகையில் நாடு முழுவதிலும் உள்ள பொலிஸ் நிலையங்களில் இராணுவத்தினர், விமானப்படையினர், கடற்படையினர் நிறுத்தி வைக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

முப்படைகளின் ஆதரவைப் பெறுவதற்கு பதில் பொலிஸ்மா அதிபர் முடிவு செய்துள்ளார் என்றும், எனினும், படையினரை நிறுத்துவதற்கு முன்னதாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் மகிந்த தேசப்பிரிய மேலும் தெரிவித்தார்.

ஓகஸ்ட் 3ஆம் திகதியில் இருந்தே முப்படையினர் தயார் நிலையில் வைக்கப்படவுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

தேர்தலை சுதந்திரமாகவும் நீதியாகவும் நடத்துவதற்கு எல்லா ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க முடியும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *